PUBLISHED ON : பிப் 09, 2020

காதலில், பல வகைகள் உண்டு. அவை என்னென்ன என்று பார்ப்போம்:
ஏரோஸ்
இந்த வகை காதல், உடல் ரீதியான ஈர்ப்பு மூலம் வருவது. மன ரீதியான தொடர்பு குறைவாகவே இருக்கும். ஆரம்ப கட்டத்தில், வேகமாக காதலிக்கும் இவர்களது காதல், போகப் போக, தொய்வு அடைந்து விடும்.
அகப்பே
இந்த வகை காதலர் கிடைத்தால், தவற விட்டு விட வேண்டாம். காரணம், துணைக்கு சுதந்திரம் தர முற்படுவர். நேர்மையாக காதலிப்பர். எல்லையற்ற காதல் கொண்டிருக்கும் இவர்கள், துணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வர்.
மேனியா
எந்த நேரமும், தன் துணையை கண்காணித்தும், கட்டுப்படுத்தியும் வருவர். இவர்களுக்கு, தங்கள் துணையின் மீதுள்ள நம்பிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.
லுாட்ஸ்
இந்த வகை காதலர்களுக்குள் பெரிதாக, 'கமிட்மென்ட்' இருக்காது. போதுமான அளவே உறவில்
இருக்கும் இவர்கள், அந்தரங்க விஷயங்களை அதிகம் பகிர விரும்ப மாட்டார்கள்.
பிரக்மா
'பிராக்டிகல்' காதலர்கள். உள்ளதை உள்ளபடி கூறுபவர்கள். இது சரி; இது தவறு என, சுட்டிக் காட்டுபவர்கள். காதல் தவிர, பொருளாதார நிலை, குடும்ப பின்னணி, கலாசாரம் என, அனைத்து விஷயங்களையும் சீர்துாக்கி பார்த்து காதலிப்பர்.