PUBLISHED ON : நவ 13, 2016

அ நிறம் | அளவு
கேரள முதல்வர் பிணராயி விஜயன், 'மற்ற அரசியல்வாதிகளை போல சிரிப்பது இல்லை...' என்று செய்தியாளர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. அவரோ, 'நான் என்ன செய்வேன்; என் முகம் அப்படி...' என்று கூறி, மிகவும் சிரமப்பட்டு சிரிப்பது போல், 'போஸ்' கொடுத்து, அனைவரையும் சிரிக்க வைப்பதுடன், சமீபகாலமாக, பொது இடங்களில் தோன்றும் போதும், செய்தியாளர்களை சந்திக்கும் போதும், 'இந்த சிரிப்பு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா...' என்பது போல், சிரமப்பட்டு சிரிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஈ.கே.நயனார், எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். வாய் திறந்தாலே, அனைவரையும் சிரிக்க வைக்கும்படி, 'ஜோக்' சொல்வார்.
— ஜோல்னாபையன்
