PUBLISHED ON : ஜூன் 23, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'என்டர் தி டிராகன்' படம் வெளிவந்து சக்கைக் போடு போட்ட போது, கராத்தே - குங்பூ போன்ற, தற்காப்புக்கலை பற்றி பரவலாக பேசப்பட்டது. அப்போது, இளைஞர்கள் பெருமளவில் தற்காப்பு வித்தையை கற்க முன் வந்தனர். 'என்டர் தி டிராகன்' படத்தில், புரூஸ்லீ செய்த சண்டைக் காட்சிகளை கண்டு, அனைவரும் வியப்படைந்தனர். அவருக்கு, இந்த அற்புத வித்தைகள் கற்று கொடுத்த குரு யார் என்று, தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியும் ஆரம்பமானது. ஹாங்காங்கில், 'டோணி லியூங்' என்பவர் தற்காப்பு கலை வித்தகராக இருந்தார். அவர் தான், புரூஸ்லீயின் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து, 'என்டர் தி டிராகன்' படத்தை வெற்றி பெற செய்தவர். டோணி லியூங் இப்போது, 'விங் சூன்' என்ற சிறப்பு தற்காப்புக்கலையை கற்றுக் கொடுக்கும் முயற்சியில், தீவிரமாக இருக்கிறார்.
— ஜோல்னா பையன்.