
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கை நாடகம்!
* நாடகம் நடக்கிறது
இயக்குனர் யாரென்று தெரியாமலே!
* முகத்திற்கு முன்னே
பணக்கட்டுகள்...
பிடித்திட ஓடிக்கொண்டே
இருக்கிறேன்!
* என் தோளின் மீது
ஒருவன் அமர்ந்து
என் முன்னே பணத்தை
கட்டி தொங்கவிட்டு
வேடிக்கை பார்க்கிறான்
என்பதை அறியாமலே!
* பொருளே பிரதானமான
பொருளாதார உலகில்
உறவுகளோ விலை பொருளாய்!
* தகனம் கூட
தனமில்லையேல்
தாழ்வாரத்தில்
உடல் அழுகும்!
* சேர்த்து வைத்த
பணம் எல்லாம்
வெறும் காகிதம்
என்று தெரியவரும்
முதுமையில்!
* நல் உறவுகளை
இளமையில் சேர்த்து
வைக்காததால்!
* பணத்தை துரத்தும்
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்து விட்ட
உறவுகளை முதுமையில்
தேடி திரிந்து
பலனில்லை!
* மனிதா...
வாழ பணம் தேவை...
ஆனால்,
பணத்திற்காய்
பொய் வேஷம்
கட்டுவதை
கலைந்து எறி!
* வாழ்க்கை நாடகம்
காலமெல்லாம் இனிக்கும்!
— எஸ்.ஏ.சரவணக்குமார்,
திருநின்றவூர்.