
நாசிமென்டோ யார் எனக் கேட்டால், யாருக்கும் தெரியாது; ஆனால், பீலே யார் என கேட்டால், கால்பந்து ரசிகர்கள் அனைவருமே உடனே பதிலளித்து விடுவர். இவருக்கு, 'பீலே' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
பிரேசில் நாட்டில், மினாஸ் ஜெராயிஸ் மாநிலத்தில், ட்ரஸ் கோராகோஸ் என்ற கிராமத்தில், பிறந்தார் பீலே. சிறுவயதில், துருக்கிய சிறுவர்களுடன் இணைந்து பந்து விளையாடும் போது, அழுக்கான இடத்தில் விழும் பந்தை, ஓடிச் சென்று எடுப்பான் சிறுவன், நாசிமென்டோ. அப்போது, சிறுவர்கள், 'பெலே... பெலே...' என்று கத்துவர். 'பெலே' என்றால், துருக்கி மொழியில், அழுக்கு, அசிங்கம் என்று அர்த்தம்.
இதனால், நாசிமென்டோவை, 'பெலே' என்றே அழைத்தனர் நண்பர்கள்; பின், இப்பெயரே, பீலே என்றாகி விட்டது. இப்போது, 75 வயதை தாண்டிய போதும், படு சுறுசுறுப்பாக இருக்கிறார், இந்த கால்பந்து சக்கரவர்த்தி!
— ஜோல்னா பையன்.

