PUBLISHED ON : பிப் 04, 2018

குழந்தை பிறந்த ஓர் ஆண்டிற்குள் மொட்டை போடுவது வழக்கம். இது, ஏன் தெரியுமா?
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை, ஐந்து நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்தாலும், வாயில் வைக்கும் போது உப்பு கரிக்கும். ஐந்து நிமிடம் ஊற வைத்த விரல்களிலேயே உப்பு இருக்கையில், பத்து மாதம், ரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருக்கும் குழந்தையின் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
இக்கழிவுகள், குழந்தையின் உடலை விட்டு எளிதில் வெளி வந்து விட்டாலும், தலையில் சேர்ந்துள்ள கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத்தான் வெளியேற முடியும். அதனால் தான், குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டை போடுகின்றனர்.
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் தங்கி, பிற்காலத்தில், பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
சிலர், தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் இன்னொரு மொட்டை போடுவர். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது, சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காக தான்!
