தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திருக்கார்த்திகை தினத்தன்று அகல்விளக்கு ஏற்றுவது ஏன்?

திருக்கார்த்திகை தினத்தன்று அகல்விளக்கு ஏற்றுவது ஏன்?

திருக்கார்த்திகை தினத்தன்று அகல்விளக்கு ஏற்றுவது ஏன்?


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்க இலக்கியத்தில், முதுகூற்றனார் எழுதிய பாடலில், தீபத்தை பற்றிய குறிப்பு உள்ளது. அதில், கடலுக்கு சென்ற கணவன்மார்கள் நெடுநேரம் ஆகியும் திரும்பி வராத நிலையில், மனைவிமார்கள் மிகுந்த வருத்தத்தோடு இருப்பர். அப்போது, தித்தன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான்.

பனிக் காலத்தில், குளிர் நேரத்தில், இருட்டு வேளையில், அனைவரும் கரை திரும்ப வெளிச்சம் இல்லையே என்று கருதி, சிறிய முரசுகளில் எண்ணெயை ஊற்றி, பெரிய திரிகளைப் போட்டு தீபம் ஏற்றி வெளிச்சம் கிடைக்குமாறு செய்தான். இது தான் கார்த்திகை மாதத்தில், பனிக்காலத்தில் விளக்குகள் ஏற்றி வழிபடுவதற்கு, ஆதாரமாகும்.

மேலும், முன்பொரு காலத்தில், மலாடபுரம் என்னும் ஊரில் இருந்த பவுத்த பிட்சுகள், சமூகத்திற்கு நலன் தரும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயை எடுத்து, குழிவான மட்பாண்டத்தில் ஊற்றி, விளக்கேற்றிய போது, மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர்ந்ததோடு, பூச்சி பொட்டு கூட அண்டாமல் இருந்ததைக் கவனித்தனர்.

முதல் நாள் வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றினர். எந்த ஆபத்தும் நேரவில்லை என்று தெரிந்தவுடன், அடுத்த நாள் வெளி முற்றத்திலும், மூன்றாம் நாள் வீட்டிற்குள்ளும் வைத்துக் கொண்டனர்.

வீட்டிற்கு மட்டும் வெளிச்சம் உண்டாக்குவதை விட, ஊருக்கே வெளிச்சம் தரும்படி இருந்தால், ஊரும் பிரகாசமாக இருக்கும். இருட்டு நேரத்தில் பூச்சி பொட்டு அண்டாமல், வெளியேறி விடும் என்று யோசித்து, உயரமான இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் எண்ணெயை நிரப்பி, திரியை போட்டு விளக்கேற்றியதும், சுற்றுவட்டாரமே ஜெகஜோதியாக காட்சி அளித்ததாம். அந்த உயரமான இடம் திருவண்ணாமலை தான். குன்றிலிட்ட விளக்கு என்னும் சொல் இதிலிருந்து தான் வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us