தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கார்த்திகையின் போது சொக்கப்பனை கொளுத்துவது ஏன்

கார்த்திகையின் போது சொக்கப்பனை கொளுத்துவது ஏன்

கார்த்திகையின் போது சொக்கப்பனை கொளுத்துவது ஏன்


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபத்திருநாளின் முக்கிய அம்சமே, கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவது தான். சொக்கப்பனை என்பது நாளடைவில், பேச்சு வழக்கில் சொக்கப்பானை என்று மருவி விட்டது.

பூலோக கற்பக விருட்சம் என்று கூறப்படும் பனை மரத்தின் அடி முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மனித குலத்திற்கு பல நன்மைகளை தருகின்றன.

நாம் எடுத்த இந்த மானுட சரீரம், பனை போல் பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதால், பனை மரத்தை தேர்ந்தெடுத்தனர். தீப நன்னாளில், கோவில் முன் உள்ள வெட்ட வெளியில், பனை மரத்தை வெட்டி வந்து நடுவர். பனை ஓலைகளை, 15 அடி உயரத்திற்கு சுற்றி மேற்புறத்தை கூம்பு வடிவில் அமைப்பர்.

பகவானுக்கு தீபம் ஏற்றி வணங்கிய பின், பகவானை பனைக்கு முன், எழுந்தருளச் செய்வர். ஆண்டவனுக்கு ஏற்றிய தீபத்தை கொண்டே சொக்கப்பனை கொளுத்துவர். வேறு எந்த மரத்திற்குமே இல்லாத சிறப்பம்சம் பனை மரத்திற்க்கு உண்டு. பனை ஓலை மட்டும் பசுமையாக இருந்தாலும், தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையது.

ஜோதி ஸ்வரூபத்தில் சொக்கநாதர் காட்சி கொடுத்ததால், சொக்கப்பனை எரியும் போது, அக்னி லிங்கமாக வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மன இருளைப் போக்கி, பரோபகாரம் செய்ய வேண்டும் என்பது தான் இதன் தாத்பரியம்.

எது எப்படியோ, பண்டிகைகள் கொண்டாடும் போது, மகிழ்ச்சிக்காக மட்டும் இல்லாமல், உட்பொருளை தெரிந்து கொண்டு வழிபட்டால், மேலும் கடவுள் அருள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. முக்கியமாக அஞ்ஞானத்தினை விலக்கி, மெய்ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொண்டு, திருக்கார்த்திகையை ஆராதிப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us