PUBLISHED ON : ஜூன் 11, 2023

அ நிறம் | அளவு
இடி இடிக்கும்போது, 'அர்ஜுனா... அர்ஜுனா...' என்று சத்தமாகச் சொல்வதற்கான காரணம் என்ன?
இடி சத்தம் பலமாக ஒலிக்கும் போது, அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு. அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக் கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
எறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன?
'பெரமோன்கள்' எனப்படும் வேதிப் பொருட்களை உமிழ்கின்றன, எறும்புகள். இந்த வேதிப் பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன.
முதலில், ஒரு எறும்பு உணவை தேடி செல்லும், அது செல்லும் பாதையில் பெரமோன்களை உமிழ்ந்து கொண்டே செல்லும். பின்வரும் எறும்பு அந்த வேதிப் பொருட்களின் வாசனையைக் கொண்டு பின்தொடரும்.
