sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மனைவி, கணவனிடம் எதிர்பார்ப்பது...

/

மனைவி, கணவனிடம் எதிர்பார்ப்பது...

மனைவி, கணவனிடம் எதிர்பார்ப்பது...

மனைவி, கணவனிடம் எதிர்பார்ப்பது...


PUBLISHED ON : மார் 03, 2019

Google News

PUBLISHED ON : மார் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கணவன், தன்னிடம் அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்; மனது புண்படும்படி பேசக் கூடாது; கோபப்படக் கூடாது; சாப்பாட்டை குறை சொல்லக் கூடாது; பலர் முன் திட்டக் கூடாது; எந்த இடத்திலும், தன்னை விட்டுக் கொடுக்க கூடாது; முக்கிய விழாக்களுக்கு சேர்ந்தே போக வேண்டும்.

* எந்த ஒரு விஷயத்தையும், தன்னிடம் கலந்தாலோசிக்க வேண்டும்; சொல்வதை பொறுமையாக கேட்க வேண்டும்; தான் கூறும் சிறந்த கருத்தை ஆதரித்து, மதிக்க வேண்டும்; வித்தியாசமாக ஏதாவது செய்தால், ரசித்து, பாராட்ட வேண்டும்.

* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல, குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து, நடக்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது, தன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும்; மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்; ஆண்டுக்கு ஒருமுறையாவது, சுற்றுலா செல்ல வேண்டும்.

* பிள்ளைகளின் படிப்பை பற்றி, அக்கறையுடன் கேட்க வேண்டும்; ஒளிவு மறைவு கூடாது; தன்னை நம்ப வேண்டும்; முக்கியமானவற்றை, தன்னிடம் கூற வேண்டும்; இன்னொரு பெண்ணைப் பற்றி பாராட்டி பேசக் கூடாது; அடுத்தவர் மனைவியுடன் ஒப்பிடாமல், தனக்கு கிடைத்ததை வைத்து சந்தோஷப்பட வேண்டும்.

* தனக்கு இருக்கும் கஷ்டம், மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்; உடல் நலமில்லாத போது, உடன் இருந்து கவனிக்க வேண்டும்; சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்; குழந்தைகள் அசிங்கம் செய்தால், 'இது உன் குழந்தை' என்று, ஒதுங்கக் கூடாது.

* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, தன்னிடமும் காட்ட வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும்; எங்கு சென்றாலும் தன்னிடம் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்; சொன்ன நேரத்திற்கு வரவேண்டும்.

* மனைவியின் பிறந்த நாள் மற்றும் அவளுக்கு பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்; பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது; தன் வீட்டாரை குறை சொல்லக் கூடாது; தன் கை செலவுக்கு, பணம் தர வேண்டும்.

- புருஷன்மாரே... இப்படியெல்லாம் இருப்பது சாத்தியமே இல்லை என்று மலைத்து போகாமல், சிறிது சிறிதாக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள்... நீங்கள் தான் உலகத்திலேயே, உத்தம புருஷன்!

- பாலாஜி.






      Dinamalar
      Follow us