PUBLISHED ON : ஆக 10, 2014

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம், 1791ல் அமலுக்கு வந்தது. அன்று, இந்த சட்டத்துக்கு, பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எதிர்ப்பை மீறி, அரசு, சட்டத்தை நிறைவேறியது. இன்று, அந்த சட்டத்தை வாபஸ் செய்வது குறித்து, அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. காரணம், பள்ளிகளிலும், பொது இடங்களிலும், பலர், ஏராளமானவர்களை, எவ்வித காரணமின்றி சுட்டு தள்ளுவது தான். ஆனால், 'சட்டத்தை வாபஸ் பெற வேண்டாம்...' என்று, ஒரு கூட்டத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
— ஜோல்னாபையன்.
