தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இங்கேயும் இப்படி நடக்குமா?

இங்கேயும் இப்படி நடக்குமா?

இங்கேயும் இப்படி நடக்குமா?


PUBLISHED ON : செப் 22, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்தல் பிரசாரத்தின் போது, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசி, வெற்றி பெற்ற பின், வாக்காளர்களுக்கு, 'அல்வா'

கொடுக்கும் அரசியல்வாதிகள், நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உள்ளனர்.

வட அமெரிக்க நாடான, மெக்சிகோவில், ஹூய்க்ஹான் என்ற சிறிய நகரம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், இங்கு நடந்த மேயர் தேர்தலில், சேவியர் செபாஸ்டின் ஜிம்மென்ஸ் சாண்டிஸ் என்பவர், வெற்றி பெற்றார்.

பிரசாரத்தின் போது, 'நான் வெற்றி பெற்றால், மக்களுக்கு பாதுகாக்கப்

பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்குவேன்...' என, வாக்குறுதி அளித்திருந்தார். வெற்றி பெற்று பல மாதங்களாகியும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆத்திரமடைந்த பொதுமக்கள், மேயர் அலுவலகத்துக்கு சென்று, அவரை வெளியே இழுத்து வந்தனர். பெண்கள் உடையை அவருக்கு அணிவித்து, நகர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊரே கைகொட்டி, சிரித்தது.

'நம்ம ஊரிலும், இது போல் நிகழ்ந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்...' என, கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us