PUBLISHED ON : பிப் 09, 2014

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், ரொப் கிலெட். இவருக்கு, 25 வயது தான் ஆகிறது. ஆனால், 17 மாதங்களுக்கு முன், இவரின் எடை எவ்வளவு தெரியுமா? 260 கிலோ. கண்ணில் தென்படும் உணவுகளை எல்லாம், வாயில் போட்டு, கிரைண்டர் போல், அரைத்து தள்ளி விடுவார். அப்படி ஒரு அகோரப் பசி இவருக்கு. இதனால், இந்த இளம் வயதிலேயே, கண்டபடி, உடல் எடை எகிறி விட்டது. இவரை பார்ப்பவர்கள், 'மாமிச மலை' என, கிண்டலடிக்க துவங்கினர். இதனால், வெளியில் வருவதற்கு வெட்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தவருக்கு தீடீரென, உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு, உணவு விஷயத்தில், கடும் கட்டுப்பாட்டை பின்பற்ற துவங்கினார். பல நாட்கள், பட்டினி கிடந்தார். இடைவிடாத உடற்பயிற்சியும் மேற்கொண்டு, 17 மாதங்களில், 76 கிலோவாக எடையை குறைத்து விட்டார். இப்போது, மற்றவர்களை போல், மிகவும் ஸ்மார்ட்டாக தோற்றமளிக்கிறார், கிலெட்.
— ஜோல்னா பையன்.
