
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்காசிய நாடான, சிரியாவில் உள்ள ஆலிப்போ என்ற நகரத்தைச் சேர்ந்தவர், அபோ ஜாக்குர், 68. இவரை, அந்த நகர மக்கள், 'மஞ்சள் மனிதர்' என்று தான், அழைக்கின்றனர். அவர் அணியும் மஞ்சள் நிற உடைகள் தான், இதற்கு காரணம்.
கடந்த, 35 ஆண்டுகளாக, மஞ்சள் நிற உடைகளை தான், இவர் அணிந்து வருகிறார். உடை மட்டுமல்ல, இவர் பயன்படுத்தும் குடை, மொபைல் போன், உள்ளாடைகள் போன்றவையும், மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும்.
'மஞ்சள் நிறத்தின் மீது, உங்களுக்கு எப்படி, இந்த அளவுக்கு மோகம் ஏற்பட்டது...' என, அவரிடம் கேட்டால், 'அது என்னவோ தெரியவில்லை.
சிறு வயதில் இருந்தே, மஞ்சள் நிறத்தின் மீது, எனக்கு அளவு கடந்த விருப்பம்.
அது, இப்போது வரை தொடர்கிறது...' என்கிறார்.
—ஜோல்னாபையன்.