தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இப்படியும் ஏமாற்றலாம்!

இப்படியும் ஏமாற்றலாம்!

இப்படியும் ஏமாற்றலாம்!


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான்; இங்கு வசிக்கும், எரினா எலிவெயன் என்ற, 22 வயது இளைஞர், அழகி போட்டி நடத்துபவர்களை, சமார்த்தியமாக ஏமாற்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த இளைஞர், தன் உருவம் மற்றும் ஹேர் ஸ்டைலை பெண் போல மாற்றி, அழகி போட்டியில் பங்கேற்றார். ஒவ்வொரு சுற்றாக முடிந்து, இறுதிப் போட்டி வரை வந்து விட்டார். அதுவரை, இவர், ஆண் என்பதே யாருக்கும் தெரியவில்லை.

இறுதிப் போட்டியில், இவரும், மற்றொரு பெண்ணும் பங்கேற்பதாக இருந்தது. போட்டி துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், தான் பெண் இல்லை என்றும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, பெண் போல, தன் உருவத்தை மாற்றி, போட்டியில் பங்கேற்றதாகவும், சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

இதனால், கஜகஸ்தானில் மட்டுமல்லாமல், உலக அளவில், இவரைப் பற்றி, பரபரப்பாக பேச்சு எழுந்தது.

இதையறிந்த அழகி போட்டி ஏற்பாட்டாளர்கள், மோசடி செய்து, போட்டியில் பங்கேற்றதாக, இவரை தகுதி நீக்கம் செய்தனர். எரினா கூறுகையில்,'வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் வேண்டுமல்லவா... அதற்காகத் தான் இப்படி செய்தேன்...' என்கிறார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us