/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
நிலக்கரி நிறுவனத்தில் 1,319 காலியிடங்கள்
/
நிலக்கரி நிறுவனத்தில் 1,319 காலியிடங்கள்
PUBLISHED ON : பிப் 07, 2017

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான கோல்(நிலக்கரி) இந்தியா லிமிடெட் நிறுவனம் 1975ல் துவங்கப்பட்டது. 41 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது தனக்குத் தேவைப்படும் 1,319 மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி இதன் விபரம்.
மொத்த மேனேஜ்மென்ட் டிரைனி காலியிடங்கள்: 1,319
பிரிவு வாரியான காலியிடங்கள்:
மைனிங் - 191
எலக்ட்ரிகல் - 198
மெக்கானிக்கல் - 196
சிவில் - 100, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் - 44,
ஜியாலஜி - 76
நிதி, அக்கவுண்ட்ஸ் - 257
பர்சனல் மற்றும் எச். ஆர். - 134
மீதமுள்ள பணியிடங்கள் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், என்விரான்மென்ட், சிஸ்டம் மற்றும் ஐ.டி., லீகல் போன்ற பிரிவுகளில் உள்ளன.
தகுதிகள்: பொதுவாக இந்தப் பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக்., பி. எஸ்சி.,அல்லது டிப்ளமோ தகுதியை மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு என்ன தகுதி என்பதை இங்கே தரப்பட்டுள்ள கோல் இந்தியா நிறுவன இணைய தளத்தில் கண்டிப்பாக பார்த்துக் கொள்ளவும். பொதுவாக இந்தப் பணியிடங்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி.,எஸ்.டி.,
பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். வயதானது டிசம்பர் 1 , 2016 ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். கோல் இந்தியா நிறுவனத்தின் இணைய தளத்தில் ரெக்ரூட்மென்ட் லிங்கிற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அப்ளை என்னும் லிங்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1000 பொதுப் பிரிவினரும் ஓ.பி.சி., பிரிவினருக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். பிறருக்கு கட்டணம் கிடையாது
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 24.
போட்டித் தேர்வு நாள்: மார்ச் 26, 2017
இணைய தள முகவரி: https://www.coalindia.in/Portals/13/PDF/Detailed_Advertisement_04012017.pdf

