/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
கோவை விவசாய பல்கலையில் 206 காலியிடங்கள்
/
கோவை விவசாய பல்கலையில் 206 காலியிடங்கள்
PUBLISHED ON : மே 09, 2017

தமிழகத்தின் கோவையில் பெருமைக்குரிய தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் இயங்கி வருவது நாம் அறிந்ததே. இப்பல்கலைக்கழகம் 1971ம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலையில் காலியாக உள்ள 206 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., /எஸ்.டி., உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது நிர்ணய கட்டுப்பாடு கிடையாது.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். இதற்குப்பின் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் டிப்ளமோ அக்ரிகல்சர் அல்லது ஹர்டிகல்சர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத்தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல்தாள் டிப்ளமோ அக்ரிகல்சர்/ஹர்டிகல்சர் தகுதிக்கு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இரண்டாவது தாளில் பிளஸ் 2 தகுதிக்கு பொது அறிவு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடக்கும். தேர்வு இரண்டரை மணி நேரம் நடக்கும்.
எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் 50 மதிப்பெண்களுக்கு நடக்கும். எழுத்துத்தேர்வு கோவை, மதுரை, திருச்சி, பெரியகுளம், கிள்ளிகுளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: 750 ரூபாய்.
கடைசி நாள் : 2017 மே 22.
விபரங்களுக்கு: http://14.139.13.70/Reports/Information%20Brochure.pdf

