/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி
/
டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி
PUBLISHED ON : மே 09, 2017

நமது நாட்டிலுள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் எச்.பி.சி.எல்., நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் விசாகப்பட்டிணம் மையத்தில் டெக்னிகல் பிரிவுகளில் காலியாக உள்ள 60 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம்: ஆபரேஷன்ஸ் டெக்னீசியனில் 50ம், பாய்லர் டெக்னீசியனில் 10ம் சேர்த்து மொத்தம் 60 இடங்கள் காலியாக உள்ளன.
வயது: 01.05.2017 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இதே பிரிவுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களோ, ஏ.எம்.ஐ.இ., படித்தவர்களோ இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் மேற்கண்ட டெக்னிகல் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் வாயிலாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 8.
விபரங்களுக்கு: www.hindustanpetroleum.com/Careeropportunities

