PUBLISHED ON : ஏப் 07, 2026

அ நிறம் | அளவு
துணை ராணுவத்தை சேர்ந்த சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'தலைமை கான்ஸ்டபிள்' பிரிவில் கம்யூனிகேசன் 197, எலக்ட்ரீசியன் 29, கால்நடை 5, ஸ்டெவார்டு 2 என மொத்தம் 233 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18-27 (20.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 30.4.2026
விவரங்களுக்கு: ssb.gov.in
