/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வீட்டு வசதி வாரியத்தில் 277 காலியிடங்கள்
/
வீட்டு வசதி வாரியத்தில் 277 காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 13, 2017

தமிழகத்தில் உள்ள மக்களின் வீடு தொடர்பான வசதி மற்றும் கட்டுமானம் செய்யும் பணிகளை மாநில அரசின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் செய்து வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக தற்சமயம் அங்கு காலியாக இருக்கும் பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம்: துணைப் பொறியாளரில் 25, சர்வேயரில் 19, ஜூனியர் டிராப்டிங் ஆபிசரில் 19, டெக்னிகல் அசிஸ்டென்டில் 76, ஜூனியர் அசிஸ்டென்டில் 126, டைப்பிஸ்டில் 12 சேர்த்து மொத்தம் 277 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.07.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., படிப்பை சிவில் இன்ஜினியரிங்கில் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக ஆங்கிலம் அல்லது தமிழில் லோயர் மற்றும் ஹையர் டைப்பிங் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 30.
விபரங்களுக்கு: www.tnhbrecruitment.in

