PUBLISHED ON : மார் 21, 2017

தமிழக அரசுப் பணியிடங்களை நிரப்ப முழுமையாக ஈடுபட்டு வரும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு காலியாக உள்ள அசிஸ்டென்ட் அக்ரிகல்சுரல் ஆபிசர்ஸ் பணியிடங்கள் 333ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள உதவி விவசாய அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2017 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு உச்ச பட்ச வயது எதுவும் கிடையாது.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். விவசாயத்தில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பை தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது விவசாயப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம், காந்திகிராமப் பல்கலைக் கழகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம், கமிஷனர் ஆப் அக்ரிகல்சர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை உள்ளடக்கியது. முதல் தாளில் 200 கேள்விகள் டிப்ளமோ படிப்பு அடிப்படையில் விவசாயம் தொடர்புடைய கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டாவது தாளில் பிளஸ் 2 அளவிலான பொது அறிவு கேள்விகள் இருக்கும். இந்த நிலைக்குப் பின்னர் நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: ரூ.150/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். இத்துடன் ஒரு முறை செலுத்தத்தக்க பதிவுக்கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க: டி.என்.பி.எஸ்.சி.,யின் அசிஸ்டென்ட் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். கடைசி நாள்: 2017 ஏப்., 7
விபரங்களுக்கு: www.tnpsc.gov.in

