PUBLISHED ON : மார் 14, 2017
103. கீழ்வரும் வாக்கியங்களை ஆராயவும்
1.ரிஷிகள் ஆத்மானுபாவத்தை கடைபிடிப்பதால் கிரஹஸ்தர்களை விடஉயர்ந்தவர்கள்.
2.ஆழ்வார்கள் திருவெளிப்பாடு அடைந்தவர்கள். ஆதலால் இவர்கள் ரிஷிகளை விட உயர்ந்தவர்கள்
இதில் எது சரி ?
அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 சரி ஈ) 1 மற்றும் 2 சரியில்லை
104. ராமானுஜரின் கூற்றுப்படி பந்தத்திற்கு காரணம்
அ) பிழம்புருவம் ஆ) கர்மம் இ)அவித்தியம் ஈ) தவறான உலக சிந்தனை
105. வைணவப் பிரிவுகளை மனதில் கொண்டு பொருத்துக
அ) சைதன்யா 1) நியே வைணவம் - அஸ்ஸாம்
ஆ) சுவாமி பிரபு பாதா 2) வைணவம் - வங்காள பிரிவு
இ) சங்கர தேவா 3) மகாராஷ்ட்ராவின் பக்திப் பிரிவு
ஈ) ஞானேஷ்வரா 4) இஷ்கான்
அ ஆ இ ஈ
அ) 2 4 1 3
ஆ) 2 1 3 4
இ) 2 3 4 1
ஈ) 4 3 2 1
106. 1. சுந்தரரின் பெயர் நான்கு: நம்பியாரூரன், தம்பிரான் தோழன், வன்தொண்டன், ஆரூரான்
2. நம்மாழ்வார் பெயர் நான்கு: சடகோபன், மாறன், நம்சடகோபன், பராங்குசன், எந்த உரை ∕உரைகள் சரியானது ?
அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 சரி ஈ) 1 மற்றும் 2 சரியில்லை
107. யமுனாச்சார்யாரின் சீடரான 'மரநெறி நம்பி'க்கு இறுதி சடங்குகள் செய்தவர்:
அ) பெரியாழ்வார் ஆ) ஸ்ரீ எம்பார்
இ) பெரிய நம்பி ஈ) நம்மாழ்வார்
108. வைணவ இலக்கியங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அது தோன்றிய காலத்தை வைத்து சரியான ஒன்றைக் கூறுக
அ) வேதங்கள், ஆகமங்கள், ராமாயணம், புராணங்கள்
ஆ) ராமாயணம், ஆகமங்கள், புராணங்கள், வேதங்கள்
இ) வேதங்கள், ராமாயணம், புராணங்கள், ஆகமங்கள்
ஈ) வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், ராமாயணம்,
109. திருஞானசம்பந்தரால் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றப்பட்ட அரசன்
அ) அதிவீரராம பாண்டியன் ஆ) ஜெகவீர பாண்டியன்
இ) கூன் பாண்டியன் ஈ) எவருமில்லை
110. கீழ்கண்ட உரைகளை ஆய்க
1. பஞ்சபூத தலம் : திருக்காஞ்சி. திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருச்சிற்றம்பலம்
2. திருமாலின் ஐந்து ஆயுதங்கள்: சங்கு, சக்கரம், வாள், கோதண்டம், கதை, ஐம்படை
எந்த உரை ∕ உரைகள் சரியானது?
அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 சரி ஈ) 1 மற்றும் 2 சரியில்லை
விடைகள்: 103)இ 104)ஆ 105)அ 106)இ 107)இ 108)அ 109) இ 110)இ
தொடரும்

