/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய அரசில் 340 காலியிடங்கள்
/
மத்திய அரசில் 340 காலியிடங்கள்
PUBLISHED ON : ஆக 01, 2017

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள 340 விஞ்ஞானி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள் : சயின்டிஸ்ட் - 'பி' குரூப் ஏ பிரிவில் 81 இடங்களும், சயின்டிபிக் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 'ஏ' குரூப் பி பிரிவில் 259 இடங்களும் என மொத்தம் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் பணி அமர்த்தப்படுவர்.
வயது தகுதி : 2017 ஆகஸ்ட் 28 அடிப்படையில் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி : சயின்டிஸ்ட் - 'பி' குரூப் ஏ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., / இ.சி.இ., / எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன்/ எம்.எஸ்சி., (இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.
* சயின்டிபிக் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - 'ஏ' குரூப் பி பிரிவுக்கு விண்ணபிப்பவர்கள் எம்.எஸ்சி., / எம்.எஸ்., / பி.இ., / பி.டெக்., ஆகிய படிப்புகளில் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிறுவன இணையதளத்தில் ஜூலை 28 முதல் ஆக., 28 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் 800 ரூபாய். எஸ்.சி., / எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்ச்சி முறை: கொள்குறி வகையிலான எழுத்துத்தேர்வு, பின் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையம்: இந்தியாவில் 26 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு மையம் உள்ளது. நேர்முகத்தேர்வு டில்லியில் மட்டும் நடைபெறும்.
கடைசிநாள் : 2017 ஆக., 28
விபரங்களுக்கு : http://apply-delhi.nielit.gov.in/PDF/NIC/NIC_Detailed_Advt_20170726.pdf.

