PUBLISHED ON : ஆக 01, 2017
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பொதுவாக இஸ்ரோ என அழைக்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பணிபுரிவது பெருமைக்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தின் திருவனந்தபுரம் லிக்விட் புரொபல்ஷன் சிஸ்டம்ஸ் மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,), பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : நுாலக உதவியாளரில் 2, எலக்ட்ரானிக்ஸ் டெக்னிகல் உதவியாளர் 1, டெக்னீசியன் பி - பிட்டரில் 6, எலக்ட்ரீசியனில் 3, டர்னரில் 2, டீசல் மெக்கானிக்கில் 1, மேசனில் 1, பிளம்பரில் 1, டிராப்ட்ஸ்மேன் - பி, மெக்கானிக்கலில் 1ம் காலியிடங்கள்
உள்ளன.
வயது : விண்ணப்பதாரர்கள் 07.08.2017 அடிப்படையில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : நுாலக உதவியாளர் பதவிக்கு பட்டப் படிப்புடன், எம்.எல்.ஐ.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். டெக்னிகல் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., /என்.டி.சி.,/என்.ஏ.சி., படிப்பு தேவைப்படும். முழுமையான தேவைகளை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 ஆக., 7.
விபரங்களுக்கு : <http://www.lpsc.gov.in/noticeresult.html>

