PUBLISHED ON : ஜூலை 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எய்ம்ஸ்', ஜிப்மர், இ.எஸ்.ஐ., உட்பட மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டயட்டீசியன், நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர், கிளார்க், அசிஸ்டென்ட் இன்ஜினியர், எலக்ட்ரீசியன், கேஸ்/பம்ப் மெக்கானிக், ஓ.டி., அசிஸ்டென்ட், பார்மசிஸ்ட், கேஷியர், மெக்கானிக், நுாலக உதவியாளர், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 3496 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.7.2025
விவரங்களுக்கு: rrp.aiimsexams.ac.in

