sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

எல்லைக் காவல் படையில் 355 'கான்ஸ்டபிள்' பணி

/

எல்லைக் காவல் படையில் 355 'கான்ஸ்டபிள்' பணி

எல்லைக் காவல் படையில் 355 'கான்ஸ்டபிள்' பணி

எல்லைக் காவல் படையில் 355 'கான்ஸ்டபிள்' பணி


PUBLISHED ON : மே 30, 2017

Google News

PUBLISHED ON : மே 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சகஸ்ட்ர சீமா பால் என்பது சுருக்கமாக எஸ்.எஸ்.பி., என்ற பெயரால் அறியப்படும் ஒரு காவல் படை.

இந்தியா - சீனா இடையே நடந்த போருக்குப் பின், எல்லையோரம் உள்ள மக்களிடையே தேசாபிமானத்தை வளர்க்கும் பொருட்டு 1963ல் இக்காவல் படை நிறுவப்பட்டது.

வடக்கு அசாம், வடக்கு வங்கம், உத்தரபிரதேச மாநிலத்தின் மலைக்கிராமங்கள், இமாச்சல் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளின் எல்லைகளையொட்டி இந்தக் காவல் படை செயல்படத் துவங்கியது. பெருமைக்குஉரிய இக்காவல் படையில் தற்சமயம் காலியாக உள்ள 355 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பிப்பவர்கள் 18 - 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இந்தப் பணி நியமனம் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனமாகும். எனவே அடிப்படைத் தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், பின்வரும் விளையாட்டுகள் ஏதாவது ஒன்றில் சர்வதேச அளவில் தகுதி போன்றவை தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். கால்பந்து, அதலெடிக்ஸ், வாலிபால், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, அக்வாடிக்ஸ், கிராஸ் கன்ட்ரி, ஜூடோ, ஹாக்கி, பென்சிங், வாட்டர் ஸ்போர்ட்ஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், எடை தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், வுசு, டேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஈக்வஸ்

டேரியன், சைக்கிளிங் போன்ற விளையாட்டு ஏதாவது ஒன்றில் சிறப்புத் தகுதி தேவை.

கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் ரூ.100. இதனை போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி., வாயிலாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: டாகுமென்டேஷன், பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Assistant Director (Sports) Force Hqr. Sashastra Seema Bal (SSB), East Block-V, R.K.Puram, New

Delhi - 110 066.

கடைசி நாள்: 2017 ஜூன் 5.

விபரங்களுக்கு: http://www.freejobalert.com/ssb/19440






      Dinamalar
      Follow us