/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா
/
ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் பணிபுரிய வேண்டுமா
PUBLISHED ON : மே 30, 2017

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டு என்பது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,110 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம்: நாலந்தாவில் 62, சண்டிகாரில் 50, மகாராஷ்டிராவில் 976, மத்தியப் பிரதேசத்தில் 824, ஒடிசாவில் 465, தமிழகத்தில் 306, தெலுங்கானாவில் 133, உத்தரக்கண்டில் 298, உத்தரப் பிரதேசத்தில் 871, மேற்கு வங்கத்தில் 125 சேர்த்து மொத்தம் 4,110 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 18 முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, என்.டி.சி., என்.ஏ.சி., போன்ற என்.சி.வி.டி., வழங்கும் பயிற்சிப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், டாகுமென்ட் வெரிபிகேஷன் ஆகியவை அடிப்படையி்ல் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதனை ஸ்டேட் வங்கிச் சலான் வாயிலாக பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 19.
விபரங்களுக்கு: www.ofbindia.gov.in/download/OFRC_IE_2017.pdf

