/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தமிழக அரசில் 3935 காலியிடங்கள்
/
தமிழக அரசில் 3935 காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 29, 2025

தமிழக அரசில் 'குரூப் - 4' பிரிவு காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
வி.ஏ.ஓ., 215, ஜூனியர் அசிஸ்டென்ட் 1678, ஜூனியர் ஆர்.ஐ., 239, டைப்பிஸ்ட் 1102, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 368, உதவியாளர் 54, வனக்காப்பாளர் 112, வனக்கண்காணிப்பு 145 உட்பட மொத்தம் 3935 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்பு
கூடுதல் தகுதி: டைப்பிஸ்ட், ஸ்டெனோ பணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் சான்றிதழ் தேவை.
வயது: பொது பிரிவினர் 18-32, 21- 32. மற்ற பிரிவினரில் பத்தாம்வகுப்புக்கு மேல் முடித்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மையம்: தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
பதிவுக்கட்டணம்: ரூ. 125
தேர்வுக்கட்டணம்: ரூ. 100
கடைசிநாள்: 24.5.2025
விவரங்களுக்கு: tnpsc.gov.in