PUBLISHED ON : ஜன 14, 2025

'எய்ம்ஸ்', இ.எஸ்.ஐ., , ஐ.சி.எம்.ஆர்., உட்பட மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நர்சிங் ஆபிசர் 813, ஆய்வக உதவியாளர் 633, அட்டனென்ட் 663, டென்டல் டெக்னீசியன் 369, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 253, கிளர்க் 211, ஸ்டெனோ 194, பார்மசிஸ்ட் 169, இ.சி.ஜி., டெக்னீசியன் 126, நிர்வாக அதிகாரி 88, ஸ்டோர் ஆபிசர் 82, அசிஸ்டென்ட் இன்ஜினியர் 59, அசிஸ்டென்ட் வார்டன் 36, ஜூனியர் அக்கவுன்ட்ஸ் 30 உட்பட 66 பிரிவுகளில் மொத்தம் 4576 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 31.1.2025
விவரங்களுக்கு: rrp.aiimsexams.ac.in