/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அரசு வங்கியில் 6128 கிளரிக்கல் பணியிடங்கள்
/
அரசு வங்கியில் 6128 கிளரிக்கல் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூலை 09, 2024

பொதுத்துறை வங்கிகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை 'ஐ.பி.பி.எஸ்.,' அமைப்பு வெளியிட்டுள்ளது.
'கிளரிக்கல்' பிரிவில் உத்தரபிரதேசம் 1246, தமிழகம் 665, மஹாராஷ்டிரா 590, கர்நாடகா 457, பஞ்சாப் 404, ம.பி., 354, டில்லி 268, பீஹார் 237, குஜராத் 236, ராஜஸ்தான் 205, ஆந்திரா 105 உட்பட 6128 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் பயிற்சி அவசியம். தாய் மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலுார், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், தஞ்சாவூர், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்: 21.7.2024
விவரங்களுக்கு: ibps.in