PUBLISHED ON : ஜூலை 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை ராணுவத்தில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைமை கான்ஸ்டபிள் பிரிவில் 112 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் உளவியல்-ஐ ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது பி.எட்., முடித்திருக்க வேண்டும்.
வயது: 5.8.2024 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100
கடைசிதேதி: 5.8.2024
விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in