/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு
/
மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : ஜூலை 09, 2024

சி.எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவர் 2, டெக்னீசியன் 17 (எலக்ட்ரிக்கல், ஏ.சி., சிவில், பார்மசிஸ்ட் உட்பட) என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு, லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., / சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: டிரைவர் 27, டெக்னீசியன் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: டிரைவர் பணிக்கு 9.8.2024. டெக்னீசியன் பணிக்கு 16.8.2024.
விவரங்களுக்கு: cdri.res.in