sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ஜிப்மரில் 74 பேராசிரியர் பணியிடங்கள்

/

ஜிப்மரில் 74 பேராசிரியர் பணியிடங்கள்

ஜிப்மரில் 74 பேராசிரியர் பணியிடங்கள்

ஜிப்மரில் 74 பேராசிரியர் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 20, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் தலைசிறந்த மருத்துவகல்லுாரிகளில் ஒன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர். இது 1823ல் பிரஞ்சு ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. பின் 1964ல் ஜிப்மர் என பெயர் மாற்றம் கண்டது. மருத்துவத் துறையில் பல்வேறு முத்திரைகளைப் பதித்து வரும் ஜிப்மர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 74

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: அனஸ்தியாலஜி, கார்டியாலஜி, நியுரோ சர்ஜரி உள்ளிட்ட 42 துறைகளைச் சேர்ந்த 74 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ப தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. முழுமையான தகவல்களை இணையதளத்தில்

பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 250 ரூபாய். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 2017 ஜூலை 14.

நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விபரங்களுக்கு : http://jipmer.edu.in/wp-content/uploads/2017/06/Website-Advertisement-for-faculty-posts-2017.pdf

நெடுஞ்சாலைத்துறையில்

மேலாளர் பதவி

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் என்.எச்.ஏ.ஐ., ஆகும். இந்தியா முழுமையும் தற்போது அதிகரித்து வரும் நான்கு வழிச்சாலைகளில் இந்தப் பெயரை நாம் கவனித்திருப்போம்.

பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 40 துணை மேலாளர்

(டெக்னிகல்) இடங்களை நிரப்புவதற்கான

அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : விண்ணப்பதாரர்கள் 31.07.2017 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : 31.07.2017 அடிப்படையிலான கேட் தேர்வில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி ? : இந்தப் பதவிக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பதிவுக்குப் பின்னர் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளை அனுப்ப வேண்டும். M.N. Ghei, Deputy General Manager (HR-Admn-II), National Highways Authority of India, G-5&6, Sector-10, Dwaraka, New Delhi 110 075.

கடைசி நாள் : 31.07.2017

விபரங்களுக்கு : http://www.nhai.org/Doc/ 24may17/RECRUITMENT%20-%20DY.%20MANAGER.pdf






      Dinamalar
      Follow us