/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 984 உதவியாளர்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 984 உதவியாளர்
PUBLISHED ON : மார் 07, 2017

இந்தியாவிலுள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் முழுமையான அரசுத்துறை நிறுவனம் என்பதோடு சர்வதேச அளவில் 28 நாடுகளில் கிளைகளைக் கொண்டு உள்ளது. 1919ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது என்ற போதும், அரசுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று வரை தொடர்ந்து லாபகரமான செயல்பாட்டில் உள்ளது. நிதித்துறை சார்ந்த கிரைசில் தர மதிப்பீட்டில் ஏஏஏ/ஸ்டேபிள் என்ற தரம் பெற்றிருப்பதன் மூலம் இந்த நிறுவனத்தின் நிதி தொடர்பான ஸ்திரத்தன்மையை உணர முடியும்.
பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
காலியிட விபரம்: இந்த நிறுவனத்தின் காலியிடங்கள் மாநில அளவிலான இடங்களாகும். தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ் நாட்டில் 104 இடங்களும், கேரளாவில் 51 இடங்களும், தெலுங்கானாவில் 25 இடங்களும், புதுச்சேரியில் 12 இடங்களும், ஆந்திராவில் 20 இடங்களும், கர்நாடகாவில் 66 இடங்களும் உள்ளிட்ட 984 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அசிஸ்டென்ட் இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 30.06.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எந்த மாநிலத்தின் இடங்களுக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநில மொழியில் திறன் தேவைப்படும்.
தேர்ச்சி முறை: முதல் கட்ட எழுத்துத் தேர்வு, முக்கியத் தேர்வு என்ற இரண்டு நிலைகளிலான எழுத்துத் தேர்வு இருக்கும். இதில் முதல் கட்ட எழுத்துத் தேர்வில் இங்கிலீஷ் லாங்குவேஜ், ரீசனிங், நியூமெரிக்கல் எபிலிடி போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முக்கிய தேர்வான மெயின் எக்சாமில் டெஸ்ட் ஆப் ரீசனிங், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ், டெஸ்ட் ஆப் ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் நாலெட்ஜ், டெஸ்ட் ஆப் நியூமெரிக்கல் எபிலிடி போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: நியூ இந்தியா நிறுவனத்தின் அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வை சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலுார், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, வேலுார் ஆகிய மையங்கள் ஏதாவது ஒன்றிலும், புதுவையிலும், நாட்டின் இதர மையங்கள் ஏதாவது ஒன்றிலும் விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கு ஏற்றபடி எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 மார்ச் 29.
விபரங்களுக்கு: www.newindia.co.in/recruit_noice4.aspx