/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வாய்ப்பு
/
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : மார் 07, 2017

அசுர வளர்ச்சி கண்டுவரும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாள்வது, தரமான சேவைகளைத் தருவதில் மெட்ரோ ரயில்களின் பங்கு முக்கியமாக மாறியுள்ளது. சென்னை, புது டில்லி, பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இத்தகைய சேவை இன்றியமையாதது. ஜெய்ப்பூரிலுள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிட விபரம்: ஜெய்ப்பூர் மெட்ரோ ரயிலில் ஜூனியர் இன்ஜினியர் (சிவில்)/ ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெய்ன் ஆபரேட்டர்/ஜூனியர் அக்கவுன்டன்ட் பிரிவுகளில் மொத்தம் 45 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் ஸ்டேஷன் கன்ட்ரோலரில் 16ம், ஜூனியர் இன்ஜினியர் சிவிலில் 6ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரானிக்ஸில் 1ம், ஜூனியர் இன்ஜினியர் - மெக்கானிக்கலில் 1ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரிகலில் 4ம் காலியிடங்கள் உள்ளன. இவை தவிர ஜூனியர் அக்கவுன்டன்ட் பிரிவில் 1ம், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 6ம், பிட்டர் - மெயின்டெய்னர் பிரிவில் 4ம், எலக்ட்ரானிக்ஸ் - மெயின்டெய்னர் பிரிவில் 6ம் சேர்த்து மொத்தம் 45 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 38 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மெயின்டெய்னர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அக்கவுன்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிட்டர் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் மெயின்டெய்னர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல், மருத்துவ தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய்.
கடைசி நாள்: 2017 மார்ச் 31
விபரங்களுக்கு: http://transport.rajasthan.gov.in/content/transportportal/en/metro/career/direct-recruitment.html