/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்ப மேலாளர் பதவி
/
ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்ப மேலாளர் பதவி
PUBLISHED ON : மார் 07, 2017

நமது நாட்டின் நிதித்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு வங்கியான பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த வங்கியின் கிளைகள் அமைந்துள்ளன.
ரூபாய் நோட்டு வெளியிடுவது, வங்கிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட மிகவும் கேந்திரமான பணிகளை ரிசர்வ் வங்கியே செய்து வருகிறது. பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியில் சிவில் பிரிவு டெக்னிகல் மேனேஜர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.03.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இதர தகுதிகள்: பி.இ.ஆர்.டி., /சி.பி.எம்., சி.ஏ.எம்., /சி.ஏ.டி., போன்றவற்றில் அனுபவம் தேவை. கன்ஸ்ட்ரக்சன் அண்டு புராஜக்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் அனுபவம் மற்றும் டிராப்டிங் செய்யும் திறன் தேவைப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரிசர்வ் வங்கியின் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 மார்ச் 16
விபரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3321