/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அணு மின்சார நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி
/
அணு மின்சார நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி
PUBLISHED ON : ஏப் 08, 2025

இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்ரென்டிஸ் பிரிவில் டிரேடு (ஐ.டி.ஐ.,) 92, டிப்ளமோ 14, கிராஜூவேட் (இன்ஜினியரிங் அல்லாதது) 16 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/பட்டப்படிப்பு
வயது: 18-26 (30.4.2025ன் படி)
பணியிடம்: கல்பாக்கம்
ஸ்டைபண்டு: ரூ. 7700 - 9000
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Nuclear Power Corporation of India Ltd, Madras Atomic Power Station, Kalpakkam - 603 102, Chengalpattu, Tamil Nadu
கடைசிநாள்: 30.4.2025
விவரங்களுக்கு: npcil.nic.in