PUBLISHED ON : டிச 17, 2012

எம்.எஸ். சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன் எனப்படும் அமைப்பு லாப நோக்கமின்றி இயங்கும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த அமைப்பு 1988ல் நிறுவப்பட்டது. சுற்றுச் சூழல் மீது அக்கறையுடன் அறிவுத் திறன் மேம்பாட்டை வளர்க்கும் நோக்கத்தில் இயங்கும் இந்த அமைப்பு இயற்கை சார்ந்த, ஏழை மக்கள் மீது அக்கறை கொண்ட, பெண்கள் மற்றும் விவசாயம் சார்ந்த மற்றும் சாராத எளியவர்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சமூக விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்:
டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி அமைப்பின் சமூக விஞ்ஞானி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி., முடித்து இரண்டு வருட கால அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது பொருளாதாரத்தில் முது நிலைப் பட்டதாரியாக இருந்தால் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதல் கட்ட கள ஆய்வுகள், தகவல்களைப் பகுத்தாராயும் திறன், அறிக்கை தயாரித்தல், புள்ளியியல் தொடர்புடையவற்றில் அனுபவம் போன்றவை கூடுதல் தகுதிகளாகத் தேவைப்படும். இதர விஷயங்கள்:
எம்.எஸ்.எஸ்.ஆர்.எப்., அமைப்பின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பதாரரின் பயோ-டேட்டா படிவத்துடன் அனுபவங்களையும் முழுமையாகவும் விரிவாகவும் தர வேண்டும். தற்போதைய முகவரி, தொடர்புக்கான தொலைபேசி, இ-மெயில் முகவரி ஆகிய முழு விபரங்களுடன் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரிக்கோ அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
The General Manager,
M.S.Swaminathan Research
Foundation,
Third Cross Street, Insititutional Area,
Taramani, Chennai - 600 113.
e-mail : admn@mssrf.res.inவிண்ணப்பிக்க இறுதி நாள் :
20.12.2012இணையதள முகவரி:
