PUBLISHED ON : டிச 17, 2012

கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள், நாடு தழுவிய கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை, உரிமங்களை வழங்குவதில் உலக சாதனை என்று பல்வேறு சாதனைகளை செய்துள்ள எல்.ஐ.சி.,யை அறியாதவர் இல்லை அல்லவா? போட்டிகள் நிறைந்த சூழலிலும் தொடர்ந்து ஆயுள் காப்பீட்டு சந்தையின் பெரும் பங்கு இந்த நிறுவனத்திடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெயர் சொன்னாலே அனைவரும் அறிந்துவிடும் எல்.ஐ.சி., நிறுவனத்தில் மார்க்கெடிங் தொடர்புடைய நேரடி விற்பனைப் பிரதிநிதிகள் 97 பேரை தென் மண்டலத்தில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:
எல்.ஐ.சி., நிறுவனத்தின் டைரக்ட் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் (டி.எஸ்.இ.,) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங், நிர்வாகவியல் பிரிவுகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியறிவு கட்டாயம் தேவைப்படும். இவற்றுடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் திறன் இருந்தால் நல்லது.மற்ற தகவல்கள்:
எல்.ஐ.சி.,யின் டி.எஸ்.இ., பதவியில் இணைந்தால், ஒவ்வொரு மாதமும் முழுமை செய்யப்படும் வணிகத்தைப் பொறுத்து மாத அளவில் ஊதியம் வழங்கப்படும். எல்.ஐ.சி., நிறுவனம் நிர்ணயிக்கும் இலக்குகளை பொறுத்து இது அமையும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐ ஏதாவது ஒரு எல்.ஐ.சி., அலுவலக கிளையில் கேஷ் கவுண்டரில் 114034 என்ற
அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இந்தப் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தின் Careers என்ற பகுதியில் அறியலாம். விண்ணப்பிக்க இறுதி நாள் :
28.12.2012இணையதள முகவரி:
