தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்


PUBLISHED ON : டிச 17, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனம் ஒரு மினி ரத்னா நிறுவனமாகும். செட்யூல் பி பிரிவிலான பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனம் மனித ஆரோக்யம் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது, வணிகம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு நாட்டின் ஐந்து மையங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளன. இங்கு கருத்தடை சாதனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, கன்சல்டன்சி சேவைகள், லைப் ஸ்பிரிங் மருத்துவமனைகளை ஏற்படுத்துதல், பெண்களுக்கான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்தல், நோய் கண்டுபிடிப்பு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற பணிகளிலும் தற்போது இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டதாரிகளை ஜூனியர் இன்ஜினியரிங்/சைட் இன்ஜினியரிங் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:



எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தின் ஜூனியர் இன்ஜினியர்/சைட் இன்ஜினியர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஒரு வருடத்திற்குட்பட்ட பணி அனுபவம் இருப்பது தேவைப்படும். இதே பிரிவுகளில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு மூன்று வருட கால பணி அனுபவம் பெற்றவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சிவில் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சைட் சூபர்விஷன், பெரிய மற்றும் பலமாடிக் கட்டிடங்களின் சிவில் இன்ஜினியரிங் பணிகளை மேற்பார்வையிட்ட அனுபவம் தேவைப்படும். பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முழு நேரப் படிப்பாக முடித்திருப்பது கட்டாயத் தேவையாகும். மேற்கண்ட எச்.எல்.எல்., லைக்கேர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 27 வயது உச்ச

வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்:



எச்.எல்.எல்., நிறுவனத்தின் மூன்று பிரிவுகளான காலி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இந்த நிறுவனத்தின் பின்வரும் இணைய தளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் :



20.12.2012

இணையதள முகவரி:



http://careers/lifecarehll.com/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us