PUBLISHED ON : டிச 17, 2012

இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஸ்டேட் வங்கியும் முக்கியமான ஒன்று. இந்த வங்கிக் குழுமத்தின் வங்கிகளில் ஒன்றுதான் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி ஆகும். இந்த வங்கியின் மொத்த பங்குகளில் 92.33 சதவிகித பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வைத்துள்ளது. பாரத் ஸ்டேட் வங்கியில் அசோசியேட் வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு கிளரிக்கல் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தேவைகள்:
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரின் கிளரிக்கல் பணி இடங்கள் ஆண்களுக்கு மட்டுமானது. மேலும் கிரிக்கெட் மற்றும் கபாடி விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக பணி நியமனமாகும் இது. 01.04.2012 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ்2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய அல்லது மாநில அளவில்கிரிக்கெட் அல்லது கபாடி போட்டியில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மற்றவை:
மேற்கண்ட தகுதி உடையவராக இருந்தால் ஒரு பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். இந்த பயோ டேட்டா படிவத்தில் பெயர், பிறந்த தேதி, தந்தை மற்றும் தாயின் பெயர், கல்வித் தகுதி, வயது, மதம், ஜாதி, தேசிய இனம், திருமண விபரம், பொழுது போக்கு, மொழியறிவு, நிரந்தர முகவரி மற்றும் தொடர்புக்கான தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி, விளையாட்டுப் பிரிவு, முந்தைய பணி விபரம் போன்ற விபரங்கள் இருப்பது கட்டாயத் தேவையாகும்.
இத்துடன் தகுதிச் சான்றிதழ் நகல்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 31.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
முகவரி:
The Chief Manager (Personnel),
Personnel Department,
State Bank of Mysore,
Head Office, Bangalore - 560 254விண்ணப்பிக்க இறுதி நாள் :
31.12.2012இணையதள முகவரி:
http://statebankofmysore.co.in/images/stories/sports_recruitment.pdf
