PUBLISHED ON : டிச 10, 2012
இந்திய கலாச்சாரம் சர்வ தேச அளவில் பிரசித்தி பெற்றது. பல்வேறு மொழி, இன மற்றும் மத வேறுபாடுகளின் ஒருங்கிணைப்பாக நமது கலாச்சாரம் இருப்பதால் பல்வேறு விதமான வண்ணங்களுடன் மிகச் சிறந்த கலாச்சாரமாக இது திகழ்கிறது. ஆனால் அறிவியல் முன்னேற்றங்களும், சமூக மாற்றங்களும் நமது கலாச்சாரத்தின் மாண்புகளை மெதுவாக அழிக்க முற்படுகின்றன. எனவே பெருமைக்குரிய கலாச்சார சிறப்புகளை கட்டிக் காப்பது காலத்தின் கட்டாயமாகவே மாறி வருகிறது.
இதனால்தான் இந்தியாவின் கலாச்சார சிறப்புகளைக் காப்பதெற்கு என்றே தனி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பழக்க வழக்கங்கள், கலை, விஷுவல் அண்டு பெர்பார்மிங் ஆர்ட்ஸ் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான முழு முயற்சிகளை எடுத்து வருகிறது. இவற்றுள் ஒன்றுதான் தாகூர் தேசிய கலாச்சார விருது ஆகும்.என்ன விருது:
இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பாக தாகூர் நேஷன்ல் பெல்லோஷிப்ஸ் பார் கல்சுரல் ரிசர்ச் என்ற பெயரில் விருதுகளை வழங்குவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. சுய விருப்பின் பெயரில் தனி நபர்களும், கலாச்சார அமைப்புகளும் ஒருங்கினைந்து பணியாற்றி இந்தியாவின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கும் முயற்சியாகும் இது. இந்த ஸ்காலர்ஷிப்பை இந்தியர்களும், இந்தியர் அல்லாதவர்களும் பெற முடியும்.
ஏதாவது ஒரு இந்தியக் கலாச்சாரப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற முடியும். பத்திரிக்கைகளில் தொடர்புடைய கலை வடிவம் குறித்த முக்கிய வெளியீடுகளை தந்தவர்கள், கலாச்சாரப் பிரிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர்கள் போன்றவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 2 பிரிவுகளிலான விருதுகளாக இவை வழங்கப்படுகின்றன.ஏனைய தகவல்கள்:
முதல் பிரிவான தாகூர் நேஷனல் பெல்லோஸ் விருது மாதம் ரூ.80 ஆயிரம் ஆக 15 பேருக்கும், இரண்டாம் பிரிவான தாகூர் ரிசர்ச் ஸ்காலர்ஸ் மாதம் ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் 25 பேருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்துவிட்டு தகுதி உடையவர்கள் இந்த தாகூர் தேசிய கலாச்கார விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மத்திய கலாச்சார அமைச்சகம் அங்கீகரித்துள்ள 37 அமைப்புகள் ஏதாவது ஒன்றுக்கு 26.12.2012க்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இணையதள முகவரி:
