/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
துணை மருத்துவப் பணியிடங்கள் 3274
/
துணை மருத்துவப் பணியிடங்கள் 3274
PUBLISHED ON : ஜூன் 06, 2017

கர்னாடக அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் துறையின் கீழ் இயங்குவதுதான் கே.ஏ.ஆர்.எச்.எப்.டபிள்யூ., அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பாக அங்கு காலியாக இருக்கும் 3274 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம் : ஸ்டாப் நர்சில் டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளில் தலா 245, மகளிர் ஜூனியர் ஹெல்த் அஸிஸ்டென்டில் 1659, ஜூனியர் ஹெல்த் அஸிஸ்டென்டில் 465, ஆப்தால்மிக் அஸிஸ்டென்டில் 44, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியனில் 11, டயட்டீசியனில் 6, பிளாக் ஹெல்த் எஜூகேஷன் ஆபிசரில் 62, எக்ஸ்ரே டெக்னீசியனில் 46 சேர்த்து மொத்தம் 3274 காலியிடங்கள் உள்ளன.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. முழுமையான தகவல்களை அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300/-ஐ கம்ப்யூட்டரைஸ்டு அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இருக்கும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : 30.06.2017
விபரங்களுக்கு : http://www.karnataka.gov.in/hfw/kannada/Documents

