/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
கடலோரக் காவல் படையில் நாவிக் பணியிடங்கள்
/
கடலோரக் காவல் படையில் நாவிக் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 06, 2017

இந்தியாவின் கடலோர பாதுகாப்பு மற்றும் சர்வதேச நீர் நிலை எல்லைகளைப் பாதுகாப்பதில் கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு அமைப்பு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. இந்த படையில் தற்சமயம் நாவிக் பிரிவில் காலியாக உள்ள குக் மற்றும் ஸ்டூவர்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது கொண்டவராக இருக்க வேண்டும். அதாவது 01.10.1995க்கு பின்னரும் 30.09.1999க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். குக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட சமையல் மெனுவிற்கு ஏற்ப சமைக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஸ்டூவர்டு பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆபிசர்ஸ் மெஸ்ஸிற்கு உணவு வழங்குதல், ஹவுஸ்கீப்பிங், நிதி நிர்வாகம், ஒயின் அண்டு ஸ்டோர்ஸ் மேலாண்மை, மெனு தயாரித்தல் போன்ற திறமைகள் கொண்டவராக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் பிட்னெஸ் டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். பாதுகாப்புப் படை சார்ந்த பணி என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும். விபரங்களறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க : விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
கடைசி நாள் : 09.06.2017
விபரங்களுக்கு : http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_5_1718b.pdf'

