/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவருக்கான வாய்ப்பு:
/
ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவருக்கான வாய்ப்பு:
ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவருக்கான வாய்ப்பு:
ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவருக்கான வாய்ப்பு:
PUBLISHED ON : ஜூன் 06, 2017

பவன் ஹான்ஸ் என்னும் இந்திய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கேடட் பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பிளஸ் படித்திருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதன் விபரம்
தகுதிகள்: இயற்பியல் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுடன் பிளஸ் 2 முடித்திருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தது 60 சதவீதத்துடன் இதை முடித்திருக்க வேண்டும். எஸ். சி. எஸ். டி பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயது: 17-25க்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : துவக்கத்தில் மாதம் 15 ஆயிரம் உதவித் தொகை பெறலாம். பின்பு பைலட் ஆக பயிற்சி முடித்த பின் மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் பெறலாம். 500 மணி நேர பயிற்சி அல்லது 2 ஆண்டுகள் முடிந்த பின் இதை பெறலாம்.
குறிப்புகள் : இந்த பயிற்சிக்கு அதிகமான கட்டணம் பெறப் படும் எனினும் மிக மிக சிறப்பான வேலை வாய்ப்பை கொண்டது இந்த வாய்ப்பு.
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு உளவியல் தேர்வு மற்றும் சைக்கோமெட்ரிக் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
முழு விபரங்கள் அறிய
http://www.pawanhans.co.in/CareerDetailsN.aspx?id=122
விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 15, 2017

