PUBLISHED ON : செப் 23, 2025

அ நிறம் | அளவு
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் இன்ஜினியர் (ஒருங்கிணைந்த மெட்டீரியல் மேலாண்மை) பிரிவில் மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ.,
வயது: 18-30 (11.10.2025ன் படி)
பணிக்காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai - 600 054.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 11.10.2025
விவரங்களுக்கு: ddpdoo.gov.in
