/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்ஜினியர்களை அழைக்கிறது பவர் கிரிட் கார்ப்பரேஷன்
/
இன்ஜினியர்களை அழைக்கிறது பவர் கிரிட் கார்ப்பரேஷன்
PUBLISHED ON : மார் 14, 2017
பவர் கிரிட் கார்ப்பரேஷன் என்பது நமது நாட்டின் பெருமைக்குரிய நவரத்னா நிறுவனங்களுள் ஒன்றாகும். மின் பகிர்மானம் தொடர்பான பணிகளைச் செய்து வரும் இந்த நிறுவனம் ஒரு மத்திய பகிர்மான பயன் சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கிளைகள் நாடெங்கும் பரந்து விரிந்துள்ளன. பெருமைக்குரிய பவர்கிரிட் நிறுவனம் அந்த நிறுவனத்தில் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிட விபரம்: இ.டி., எலக்ட்ரிகல் பிரிவில் 103ம், இ.டி., எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15ம், இ.டி., சிவில் பிரிவில் 15ம், இ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 19ம் சேர்த்து மொத்தம் 152 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது: 31.12.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., இன்ஜினியரிங் படிப்புகளில் ஏதாவது ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.
இதர தேவைகள்: இந்தப் பதவியில் இணைய விரும்புபவர்கள் GATE 2017 தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்வு முடிவுகளைப் பெறத்தக்க இறுதியாண்டு மாணவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: கல்லூரி மதிப்பெண், GATE 2017 மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மற்றும் குழுவிவாதம் மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பவர் கிரிட் நிறுவனத்தின் மேற்கண்ட எக்சிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 31.03.2017
விபரங்களுக்கு: http://www.powergridindia.com/_layouts/PowerGrid/WriteReadData/file/career/cc/et22/Detailed_Advt_2ET22_6March.pdf

