/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பொதுக்காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் உதவி மேலாளர்கள்
/
பொதுக்காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் உதவி மேலாளர்கள்
பொதுக்காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் உதவி மேலாளர்கள்
பொதுக்காப்பீட்டுக் கழக நிறுவனத்தில் உதவி மேலாளர்கள்
PUBLISHED ON : மார் 14, 2017

இந்தியாவிலுள்ள காப்பீட்டுத் துறை ஆயுள் மற்றும் பொதுக்காப்பீடு என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் பொது ஆயுள் காப்பீட்டை நிர்வகிக்கும் நிறுவனமாக பொதுக் காப்பீட்டுக் கழகம் எனப்படும் ஜி.ஐ.சி., அமைப்பு உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் உதவி மேலாளர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஜி.ஐ.சி., நிறுவனத்தின் அசிஸ்டென்ட் மேனேஜர் சார்ந்த பிரிவில் லீகலில் 3ம், அக்ரிகல்சுரல்/ஹார்டிகல்சுரல் சயின்ஸ் பிரிவில் 4ம், இந்தியில் 1ம், சிவில் இன்ஜினியரிங்கில் 1ம், மரைன் இன்ஜினியரிங்கில் 1ம், ஏரோனாடிகல் இன்ஜினியரிங்கில் 2ம், சார்டர்டு அக்கவுண்டண்டில் 2ம், ஐ.டி.,யில் 2ம், மெடிக்கலில் 3ம், ஆக்சுவரியில் 2ம், கம்பெனி செகரட்டரியில் 1ம் பி.ஏ., எக்சிகியூடிவில் 1ம், ஜெனரலில் 10ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: 27.03.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. எனவே இதுபற்றிய முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழுவிவாதம் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ ஜி.ஐ.சி.,க்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
எழுத்துத் தேர்வு விபரங்கள்: ஜெனரலிஸ்ட்களுக்கான எழுத்துத் தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. பிரிவு ஏ.,வில் ரீசனிங் எபிலிடி, கிரிடிகல் திங்கிங் ஆகிய கேள்விகளும், பிரிவு பி.,யில் டெஸ்ட் ஆப் ரீசனிங், இங்கிலீஷ், பொது அறிவு, கணிதம், கம்ப்யூட்டர் போன்றவையும், பிரிவுசி.,யில் டெஸ்கிரிப்டிவ் வகையிலான கேள்விகளும் இருக்கும். ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு இதே எழுத்துத் தேர்வுகளில் பிரிவு ஏ.,வில் மட்டும் துறை சார்ந்த கேள்விகள் கூடுதலாக இடம் பெறும்.
விண்ணப்பிக்க: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 27.03.2017
விபரங்களுக்கு: https://www.gicofindia.com/images/pdf/RECRUITMENT-OF-SCALE-I-OFFICERS-DETAILED-ADVERTISEMENT.pdf

