/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்கள்
/
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்கள்
PUBLISHED ON : மார் 14, 2017
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. ஒழுக்கம், கட்டுப்பாடு, சுயமுன்னேற்றம் ஆகிய நற்சிந்தனைகளை மாணவர்களின் மனங்களில் விதைப்பதில் இவை முன்னிலை வகிக்கின்றன.
இந்தியாவின் ஜலந்தரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: பி.ஜி.டி., ஆசிரியர் பிரிவில் பொருளாதாரம், புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், உயிரியல், இந்தி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளிலும், டி.ஜி.டி., ஆசிரியர் பிரிவில் சமூக அறிவியல், கணிதம், உயிரியல், இந்தி, பஞ்சாபி ஆகிய பிரிவுகளிலும், பிரைமரி டீச்சர் பிரிவிலும், பல்வகை கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பிரிவிலும், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, விளையாட்டு, யோகா, டான்ஸ் மற்றும் கிராப்ட் பயிற்றுனர், கவுன்சிலர், டாக்டர், நர்ஸ் ஆகிய பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உடைய மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Kendriya Vidyalaya Suranussi. GT Road Suranussi. Jalandhar - 144027
கடைசி நாள்: 2017 மார்ச் 24.
விபரங்களுக்கு: http://epaper.tribuneindia.com/c/17286923

