/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
சி.பி.எஸ்.இ., நெட் தேர்வு அறிவிப்பு
/
சி.பி.எஸ்.இ., நெட் தேர்வு அறிவிப்பு
PUBLISHED ON : ஆக 22, 2017
சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷன் எனப்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெறுவதற்கான தகுதித் தேர்வை யு.ஜி.சி., அமைப்பு நேஷனல் எலிஜிபிலிடி டெஸ்ட் எனப்படும் நெட் தேர்வு வாயிலாக நடத்துகிறது. தற்போது இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதர தகவல்கள் : நெட் தேர்வு ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் அசிஸ்டென்ட் புரொபசர் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அசிஸ்டென்ட் புரொபசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உச்ச வயதில் வரம்பு எதுவும் கிடையாது. எந்தப் பிரிவாக இருந்தாலும் முதுநிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவராக இருப்பது தேவைப்படும். ரிசர்ச் படிப்பை அவர் பட்டம் பெற்ற துறையில் மட்டுமே செய்ய முடியும். ஏற்கனவே யு.ஜி.சி.,/சி.எஸ்.ஐ.ஆர்., ஜே.ஆர்.எப்., தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தத் தேர்வில் விலக்கு உள்ளது. முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறியவும். அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
தேர்ச்சி முறை : பொது எழுத்துத் தேர்வு மூலமாக இருக்கும்.
விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2017 செப்., 11.
விபரங்களுக்கு : http://cbsenet.nic.in/cms/public/home.aspx

